மீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை!

மீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் சுகாதார கட்டுப்பாடுகளை மீறினால், மீண்டும் முடக்கநிலைக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என உக்ரேன் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

அந்த நாட்டில் கடந்த மாதம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர், மக்கள் சமூக விலகல் மற்றும் பிற பாதுகாப்பு விதிகளை புறக்கணித்து வருவதாக உக்ரேனிய அதிகாரிகள் பலமுறை புகார் கூறியுள்ளனர். இதன் பின்ணியிலேயே உக்ரேனிய அரசு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினம் தோறும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதற்கு, கட்டுப்பாடுகளை மீறுவதும் மிக முக்கிய காரணமாக அமைகின்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில், உக்ரேனில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு புதிதாக 1,109பேர் பாதிக்கப்பட்டனர். அதன் காரணமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 41,117 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் புதிதாக 19பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,086ஆக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது இந்நிலையிலேயே அந்நாட்டு அரசு இவ்வாறான கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.