உலகின் மிக சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் சிக்கினார்

உலகின் மிக சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் சிக்கினார்

உலகின் மிக சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவரான சே சீ லொப் (Tse Chi Lop) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியா வழங்கிய தகவலின் படி இவர் டச்சு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

சீனாவில் பிறந்து கனேடிய குடிமகனான 56 வயதான இவர் ஆசியாவின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர் ஆவார்.

இவரை கைது செய்ய அவுஸ்திரேலிய பொலிஸார் 10 ஆண்டுகளாக முயற்சித்து வருகின்றனர்.

ஏனென்றால் அவுஸ்திரேலியாவுக்குள் வரும் போதை மருந்துகளில் 70 சதவீதம் இவர் மூலம் நாட்டிற்குள் நுழைகிறது.