கர்நாடகத்தில் ஜூலை 1ஆம் திகதி முதல் பாடசாலைகள் திறப்பு

கர்நாடகத்தில் ஜூலை 1ஆம் திகதி முதல் பாடசாலைகள் திறப்பு

கர்நாடகத்தில் ஜூலை 1ஆம் திகதி முதல் பாடசாலைகள் திறக்கப்படும் என அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. கொரோனா நோய் உலகம் முழுவதையும் ஆட்டி படைத்து வருகிறது. இதை தடுக்க இந்தியாவில் மத்திய அரசு, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதனால் இந்த நோய் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கர்நாடகத்தில் ஜூலை 1ஆம் திகதி முதல் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் ஜூலை 1ஆம் திகதியிலிருந்து 4 ஆம் வகுப்பு முதல் 7 ஆம் வகுப்பு வரையிலான பாடசாலைகள் திறப்படும் என்றும் 1 முதல் 3ஆம் வகுப்பு, 8 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான பாடசாலைகள் ஜூலை 15ஆம் திகதி முதல் திறக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.