தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 30 பேர் கைது...!

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 30 பேர் கைது...!

கடந்த 24 மணிநேரத்திற்குள் முகக் கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பேணாமலிருந்த 30 பேரை கைது செய்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் தற்போது வரை  2710 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அண்ணளவாக 2600 பேருக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.