சற்று முன்னர் மீண்டும் முடக்கப்பட்ட பகுதி - இராணுவம் மற்றும பொலிஸார் குவிப்பு

வவுனியாவில் மீண்டும் முடக்கப்பட்ட பகுதி - இராணுவம் மற்றும பொலிஸார் குவிப்பு

வவுனியா பட்டாணிசூர் கிராமத்தின் சில வீதிகள் இன்று மாலை 6 மணியிலிருந்து முடக்கப்பட்டுள்ளன.

வவுனியா பட்டாணிச்சூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் மற்றும் பல்கலைகழக மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த கிராமம் கடந்த நான்காம் திகதி முடக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களுடன் தொடர்புகளை பேணிய பலருக்கு பிசிஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. குறித்த கிராமம் முடக்கப்பட்டு14 நாட்கள் கடந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை முற்றாக விடுவிக்கப்பட்டது.

எனினும் கடந்த இரண்டு தினங்களிற்கு முன்பாக வெளியாகிய பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் குறித்த பகுதியை சேர்ந்த 20 பேருக்கு தொற்று உள்ளமை மீண்டும் உறுதிசெய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து பட்டாணிச்சூர் கிராமத்தின் 1ம்,2ம்,3ம் ஒழுங்கைகள் இன்று மாலை 6 மணியிலிருந்து முடக்கப்பட்டு தனிமைப்படுத்தல் ஊரடங்குசட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதிக்குள் எவரும் நடமாட முடியாதபடி இராணுவம் மற்றும் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.