10 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது..!

10 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது..!

மட்டக்களப்பு - ஊரணி பகுதியில் முச்சக்கர வண்டியில் கடத்திச்செல்லப்பட்ட 10 கிலோ கிராம் கேரள கஞ்சாவை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

வீதி சோதனையில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரால் இன்று காலை குறித்த கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்