
எருமைகளை கொலை செய்ததற்காக 6 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்...!
நக்லஸ் பாதுகாப்பு வனத்திற்குரிய பிட்டவலபதன பிரதேசத்தில் சுதந்திரமாக சுற்றித் திரிந்த எருமைகளை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேர் இந்த மாதம் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நாவுல நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாத்தளை பிரதேசத்தின் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல்களின்படி, மாத்தளை பிரிவுக்கு பொறுப்பான உயர் காவல்துறை அதிகாரியின் அறிவுறுத்தல்களின் கீழ் மாத்தளை பிரதேச குற்ற புலனாய்வு பிரிவைச் சேர்ந்த ஒரு குழு இந்த விசாரணையை மேற்கொண்டிருந்தது.
சந்தேக நபர்களுக்கு சொந்தமான இரண்டு முச்சக்கர வண்டிகளும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டதுடன், காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணையின் போது குறித்த சந்தேக நபர்கள் பிட்டவலபதன பகுதியில் நடந்த கால்நடை கொலைகளிலும் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.