புவி சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத் தலைவரினால் சுற்றுச்சூழல் அமைச்சருக்கு ஓர் அறிவித்தல்...!

புவி சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத் தலைவரினால் சுற்றுச்சூழல் அமைச்சருக்கு ஓர் அறிவித்தல்...!

தென்னைத் தோட்டங்களில் மணல் மற்றும் களிமண்ணை அகழ்வதற்காக கடந்த இரண்டு மாதங்களாக எவ்வித கோரிக்கைகளும் முன் வைக்கப்படவில்லை என புவி சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத் தலைவர் அனுர வல்பொல, சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தென்னைத் தோட்டங்களில் மணல் மற்றும் களிமண்ணை அகழ்வதற்காக அனுமதி வழங்குவதைத் தடை செய்த காரணத்தினால் ஏற்பட்ட மாற்றத்தை பற்றி சுற்றுச்சூழல் அமைச்சில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது புவி சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத் தலைவர் அனுர வல்பொல கருத்து தெரிவித்திருந்தார்.

வடமேற்கு மாகாணத்தின் குருணாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் பெரிய அளவிலான மணல் சுரங்கம் மற்றும் களிமண் சுரங்க மோசடி தொடர்பாக வெளிவந்த தகவல்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

இந்த பெரிய அளவிலான மோசடி காரணமாக, வருடாந்த தேங்காய் அறுவடை எண்ணிக்கை நாட்டில் குறைந்து வருவதாகவும், இதன் காரணமாக தேங்காயின் விலை சந்தையில் அதிகரித்துள்ளது எனவும் சுற்றுச்சூழல் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.