எரிபொருள் விநியோகம் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட விசேட தீர்மானம்..!
எரிப்பொருள் விநியோகத்தின் போது 40 சதவீத பங்களிப்பை தொடருந்துகளின் ஊடாக பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கத்தினால் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகேவுக்கும், வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.
2019 ஆம் ஆண்டு தொடருந்துகளின் ஊடான எரிப்பொருள் விநியோகம் 28 சதவீதமாக காணப்பட்டுள்ளது.
தற்போது அது 32 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாரவூர்திகளில் எரிப்பொருளை கொண்டு செல்லும் போது ஏற்படும் சூழல் மாசுபாடு, போக்குவரத்து நெரிசல் மற்றும் அதிக சலவீனம் ஆகியனவற்றை குறைப்பதற்காக இவ்வாறு தொடருந்தின் பங்களிப்பை அதிகளவில் பெற்றுக்கொள்ள ஆராயப்பட்டு வருகின்றது.