தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 18 பேர் கைது..!

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 18 பேர் கைது..!

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 103 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்