ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் மூவர் குத்திக்கொலை

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் மூவர் குத்திக்கொலை

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கொ நகரில் மர்ம நபர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 03 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஸ்டெர்வெல் எனும் சொகுசு ஹோட்டல் ஒன்றிற்குள் கத்தியுடன் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கு இருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரால் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இக்கத்திக்குத்து தாக்குதலில் 03 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 06 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதுவேளை கடந்த 21 ஆம் திகதி இங்கிலாந்திலும் இதே போன்று பூங்காவில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 03 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.