கடுமையான போதைக்கு அடிமையாகிய இளைஞன்! தனது சிறுநீரகத்தை விற்பனை செய்த துயரம்

கடுமையான போதைக்கு அடிமையாகிய இளைஞன்! தனது சிறுநீரகத்தை விற்பனை செய்த துயரம்

போதைப் பொருள் கொள்வனவு செய்வதற்காக நபர் ஒருவர் தனது சிறுநீரகத்தை விற்றுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருட்டு சம்பவம் தொடர்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த நபரிடம் இருந்து 2 கிராம் 150 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேலியகொட பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.