இலகு பணச் சேவை மூலம் போதைப்பொருள் விற்பனை செய்த அதிகாரியொருவர் கைது!

இலகு பணச் சேவை மூலம் போதைப்பொருள் விற்பனை செய்த அதிகாரியொருவர் கைது!

ஈசி கேஷ் முறையில் போதைப்பொருளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அநுராதபுரத்திற்கு பொறுப்பான குற்றத்தடுப்பு விசாரணை பணியகத்தின் விஷ போதைப்பொருள் சுற்றிவளைப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அவரை 7 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அநுராதபுரம் பிரதான நீதவான் பிரசன்ன சமரசிங்க நேற்று உத்தரவிட்டிருந்தார்.

சந்தேகநபர் ஈசி கேஷ் முறையில் போதைப்பொருளை விற்பனை செய்து ஈட்டிய பணம் மற்றும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ள கையடக்க தொலைபேசிகளின் உண்மையான உரிமையாளர்கள் தொடர்பிலான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.