பல்வேறு கட்டுப்பாட்டுகளுடன் கொண்டாடப்படும் சுதந்திர தினக் கொண்டாட்டம்...!
73 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்பவர்கள் உட்பட அனைத்து பாதுகாப்பு தரப்பினருக்கும் பி.சி.ஆர் மற்றும் ரெபிட் ஆன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடத்தப்படுவது தொடர்பாக கொழும்பில் உள்ள சுதந்திர சதுர்க்க வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
73 வது சுதந்திர தின கொண்டாட்டம் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்னஇ ராணுவத் தளபதி சவேந்திர சில்வா உட்பட ஏனைய அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.