நாட்டின் பல பிரதேசங்களில் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு...!
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லி மீற்றர் அளவான மழை வீழ்ச்சி பதிவாகக்ககூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன் ஊவா மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அந்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடுவதுடன் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களிடம் கோரியுள்ளது.