வடக்கில் இரண்டாவது கொரோனா மரணம் பதிவானது!

வடக்கில் இரண்டாவது கொரோனா மரணம் பதிவானது!

மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று உயிரிழந்தவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னார் உப்புக்குளத்தைச் சேர்ந்த 57 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இருதய நோயாளியான அவர் மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

அவரது மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையில் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் முதலாவது கொவிட் -19 நோயாளி இன்று உயிரிழந்துள்ளார்.

இதன்படி வடக்கு மாகாணத்தில் இரண்டாவது நபர் கொவிட் -19 தொற்றால் உயிரிழந்துள்ளார்.