இந்தியாவில் இடிமின்னல் தாக்கியதில் 100க்கும் அதிகமானோர் பலி...!

இந்தியாவில் இடிமின்னல் தாக்கியதில் 100க்கும் அதிகமானோர் பலி...!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் இடி மின்னல் தாக்கியதில் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பீகார் மாநிலத்தில் மாத்திரம் இடி மின்னல் தாக்கியதில் 83 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்இ இவர்களில் 20 பேர் வரை உயிரிழந்துள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு தினங்களில் இந்த அனர்த்தம் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன்இ இந்தியாவின் உத்தர பிரதேச பகுதியில் இடிமின்னல் தாக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது கவலைகளை தெரிவித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.