எதிர்வரும் பெப்ரவரியிலிருந்து ஆறுமாத காலத்திற்கு வரவுள்ள நடைமுறை

எதிர்வரும் பெப்ரவரியிலிருந்து ஆறுமாத காலத்திற்கு வரவுள்ள நடைமுறை

எதிர்வரும் பெப்ரவரி மாதத்திலிருந்து ஆறுமாத காலத்திற்கு நிலையான விலையில் 10 அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கையில்,

குறித்த பொருட்களின் விலையை 6 மாதங்களுக்கு நிலையானதாக முன்னெடுப்பதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.

புதிதாக வரி விதிக்கப்பட்டால் அல்லது வெளிநாட்டு நாணயத்தில் மாற்றம் ஏற்பட்டால் இந்த பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படலாம்.

உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் நேரடியான முதலீட்டாளர்களிடம் இருந்து நாம் இது குறித்த ஆலோசனைகளை பெறவுள்ளோம். 22 ஆம் திகதி வரைக்கும் இது குறித்த ஆலோசனைகளை சமர்ப்பிக்க முடியும்.

சர்வதேச சந்தைக்கு அமைவாக இந்த பொருட்களைப் பெற்றுக்கொண்டு அதாவது சதொச மற்றும் கூட்டுறவு வர்த்தக செயற்பாடுகள் மூலம் இவற்றை கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

சதொச கூட்டுறவு சங்கங்கள் மூலம் இந்த பொருட்களை கொண்டு வந்து இவற்றின் விலையை குறைக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்