கழிவு தேயிலை தொகையுடன் 7 பேர் கைது...!

கழிவு தேயிலை தொகையுடன் 7 பேர் கைது...!

சீதுவ - கொடுகொட பகுதியில் 29 ஆயிரம் கிலோகிராம் கழிவு தேயிலையுடன் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோனஹேன காவல்துறை விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைவாக இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதன்போது, கழிவு தேயிலை மற்றும் அதனை ஏற்றிச்சென்ற பாரவூர்தி என்பனவும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தேயிலை என பட்டியலில் குறிப்பிடப்பட்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.