இலங்கையில் வரலாறு காணாதளவு உயர்ந்த உளுந்தின் விலை

இலங்கையில் வரலாறு காணாதளவு உயர்ந்த உளுந்தின் விலை

நாட்டில் உளுந்து இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டதையடுத்து, சந்தையில் உளுந்தின் விலை இரண்டாயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.

உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்கும் நோக்கில், கடந்த வருடம் பல பொருட்களுக்கு அரசாங்கத்தினால் இறக்குமதித் தடை விதிக்கப்பட்டது.

இதனடிப்படையில், உளுந்து இறக்குமதிக்கும் கடந்த ஜூன் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டநிலையில், நாட்டின் உளுந்து விலை அதிகரித்துள்ளதுடன், உளுந்திற்கு பாரிய தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட காலப்பகுதியில் 300 ரூபாயாகக் காணப்பட்ட ஒரு கிலோ உளுந்து, தற்போது சுமார் 2,000 ரூபாயாக அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.