கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் 3பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் 3பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் 3 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதில் இருவரை சிகிச்சைகளுக்காக கொண்டு சென்றுள்ளதுடன் மற்றொருவர் இரண்டு நாட்களாகியும் குறித்த பல்கலைக்கழக விடுதியிலேயே தங்கி இருப்பதாகவும் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்தனர்.

இம்மாதம் 6ஆம் திகதி திருகோணமலை வளாகத்திற்கு தாம் வருகை தந்ததாகவும். அவ்வாறு வரும்போது எந்த விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்க பட்டிருக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.

மேலும் அனைத்து மாணவர்களும் பொது மலசல கூடங்களை பயன்படுத்துவதோடு உணவு உண்பதற்காக ஒதுக்கப்பட்ட அறையில் ஒன்று கூடுவதன் காரணமாக தம்மை நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள போராடி வருவதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

இதனால் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் தமது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு இதற்கான தகுந்த முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பல்கலைக்கழக மாணவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.