வலம்புரிச்சங்கை விற்பனை செய்ய முயற்சித்த 6 பேர் கைது...!
வலம்புரிச்சங்கொன்றை விற்பனை செய்வதற்கு முயற்சித்த சந்தேக நபர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடற்படை முகாமின் உளவுத்துறை பிரிவிற்குக் கிடைத்த தகவல்களையடுத்து அம்பலாந்தோட்டை காவல் துறை விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பியகம, கடுவெல மற்றும் கட்டுநாயக்க பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
இவர்களுடன் பெண்ணொருவரும் இருந்துள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.
மீரிகம பிரதேசத்தைச் சேர்ந்த விகாரையொன்றுக்குச் சொந்தமான இவ்வலம்புரிச்சங்கை 2 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்வதன் நிமித்தம் அம்பலாந்தோட்டையிலுள்ள விடுதியொன்றிற்கு எடுத்துச் சென்றிருந்த வேளையிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது இவர்களது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்ட அதிசொகுசு வாகனமொன்றையும் காவல் துறை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
மேற்படி சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
