சீகிரியாவை பார்வையிட சென்ற உக்ரைன் நாட்டின் சுற்றுலாப்பயணிகள்...! (படங்கள் இணைப்பு)
நாட்டிற்கு வருகைத்தந்துள்ள யுக்ரைனின் 45 சுற்றுலாப்பயணிகளும் இன்றைய தினம் சீகிரியா குன்றினை பார்வையிட்டனர்.
மத்திய கலாசார நிதியத்தின் சீகிரிய திட்ட அலுவலக அதிகாரிகளால் அவர்கள் வரவேற்கப்பட்டதாகவும் எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
சுற்றுலாப்பயணிகளுக்கு காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து பாதுகாப்பு வழங்கியிருந்தனர்.
இரண்டு குழுக்களாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சுற்றுலாப்பயணிகள் சீகிரிய குன்றினை பார்வையிட்டதாகவும் எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு வருகைத்தந்த யுக்ரைன் சுற்றுலாப்பயணிகளுக்கு இதற்கு முன்னர் சீகிரியா மற்றும் பொலனறுவையை பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், அது கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
