நாளையதினம் விடுவிக்கப்படும் மற்றும் தனிமைப்படுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு

நாளையதினம் விடுவிக்கப்படும் மற்றும் தனிமைப்படுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு

கொரோனா தொற்று அதிகளவில் பரவியதை அடுத்து முடக்கப்பட்ட பகுதிகள் பகுதி பகுதியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் களுத்துறை பொலிஸ் பிரிவில் பத்து பகுதிகளும், பேருவளை பொலிஸ் பிரிவில் மற்றொரு பகுதியும் தனிமைப்படுத்தலில் இருந்து நாளையதினம் விடுவிக்கப்படுவதாக கொவிட் தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது.

அதன்படி, 725 களுத்துறை தெற்கு, 725 ஏ களுத்துறை, 725 பி வேலபுர, 727 மஹாவட்ட, 727 பி குடா ஹீனதியங்கலா, 727 சி குருண்டுவத்த, 727 இ அக்கரகொட, 730 வெட்டுமகட, 730 ஏ, களுத்துறை குடா மற்றும் 730 பி கத்துகுருந்த ,743ஏ பேருவளையில் உள்ள அக்ரமலே ஆகிய பிரதேசங்களே தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.

இதற்கிடையில், கம்பஹா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் ஐந்து பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, மினுவாங்கொட பொலிஸ் பகுதியில் உள்ள கலோலுவா கிழக்கு மற்றும் மேற்கு கிராம சேவகர் பகுதிகளும், மாத்தளை பொலிஸ் பகுதியில் உள்ள வரகாமுர (356), மீதேபியா (356 பி) மற்றும் தெஹிபிட்டியில் உள்ள மத்தாவா கிராமமும் (356 ஏ) தனிமைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.