இன்றும் நாட்டின் அநேக பிரதேசங்களில் மழையுடனான வானிலை!
வடக்கு, வட மத்திய கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று மழையுடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னரான காலப்பகுதியில் இடியுடன் கூடிய மழை பதிவாகும் என குறிப்பிடப்படுகிறது.
சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளின் சில இடங்களிலும், 100மில்லிமீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது