தீர்மானம் இன்றி முடிவடைந்த கலந்துரையாடல்..!

தீர்மானம் இன்றி முடிவடைந்த கலந்துரையாடல்..!

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளியவர்களுக்கு வழங்கும் விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து பார்க்க ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவினருக்கும் துறைமுக தொழிற்சங்க கூட்டமைப்பு சங்கத்தினருக்கும் இடம்பெற்ற கலந்துரையாடல் தீர்மானம் இன்றி முடிவடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்கும் திட்டத்திற்கு எதிராக தேசிய தொழிற்சங்கங்கள் இன்று ஒன்லைன் முறைமையில் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரம் தொடர்பில் மேற்கொள்ளக்கூடிய திட்டஙகள் தொடர்பில் ஆராய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட 7 பேர் அடங்கிய குழுவும் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.