
கரிமுத்துக்களை விழுங்கிய நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி ...!
கரிமுத்துக்களை கடத்திய காரணத்திற்காக முல்லைத்தீவு நகருக்கு அண்மித்து காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் அந்த கரி முத்துக்களை விழுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த மோசடியில் ஈடுப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பின் போது கரிமுத்துக்களை விழுங்கிய நபரை மாஞ்சோலை பிரதேச மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.