பாடசாலை போக்குவரத்து சேவைகளில் ஈடுபடவுள்ள வாகன சாரதிகளுக்கு கொரோனா பாிசோதனை!

பாடசாலை போக்குவரத்து சேவைகளில் ஈடுபடவுள்ள வாகன சாரதிகளுக்கு கொரோனா பாிசோதனை!

எதிர்வரும் நாட்களில் பாடசாலை போக்குவரத்து சேவைகளில் ஈடுபடவுள்ள வாகன சாரதிகளுக்கும், உதவியாளர்களுக்கு றெபிட் எண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதிகாவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களுக்கு அமைய பாடசாலை போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்படுவதில்லை என தெரியவந்துள்ளது.

குறிப்பாக முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட சுகாதார வழிமுறைகள் பின்பற்றபடுவதில்லை என தெரிய வந்துள்ளது.

இது தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து போக்குவரத்து காவல்துறையினருக்கு அறிவுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு சுகாதார வழிமுறைகளை பேணாதவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் பிரதிகாவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

இதேவேளை, தற்போது நாடுமுழுவதும் ஒரு லட்சத்து 16 ஆயிரம் பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.