துன்புறுத்தல்கள் காரணமாக ஓமானில் நிர்க்கதியான 283 பேர் நாடு திரும்பினர்...!

துன்புறுத்தல்கள் காரணமாக ஓமானில் நிர்க்கதியான 283 பேர் நாடு திரும்பினர்...!

தொழில்வாய்ப்புகளுக்காக ஓமான் சென்று துன்புறுத்தல்கள் காரணமாக நாடுதிரும்ப முடியாமல் அங்கு நிர்க்கதியாகியிருந்த 283 இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இன்று காலை 8.30யுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற விமான சேவைகளில் அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதற்கமைய அதிகமானோர் ஓமானின் மஸ்கட் விமானநிலையத்தில் இருந்து வருகை தந்த யு.எல்.206 ரக விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அவர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத்திற்கான எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.