நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை..!
நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் வேளைகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, ஹம்பாந்தோட்ட மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழையுடனான வானிலை நிலவக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்கு பின்னர் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடையிடையே 75 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் இடை இடையே மழை பெய்யக்கூமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.