ஏற்றுமதி விவசாயத்துறையின் பாாிய இலக்கு...!

ஏற்றுமதி விவசாயத்துறையின் பாாிய இலக்கு...!

2025 ஆம் ஆண்டில் 100 பில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டுவது சிறு ஏற்றுமதிப் பயிர் விவசாய திணைக்களத்தின் இலக்காகும் என ஏற்றுமதி விவசாயத்துறையின் பணிப்பாளர் ஜெனரல் ஏ.பி.ஹீன்கெந்த தெரிவித்துள்ளார்.

இந்த முறை பாதீட்டில் ஏற்றுமதி விவசாய திணைக்களத்திற்காக 700 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் ஊடாக கருவா, மிளகு, கராம்பு, சாதிக்காய், கொக்கோ மற்றும் கோப்பி பயிர்ச்செய்கைகளுக்காக உதவியும், இலவசமாக மரக்கன்றுகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளும் இடம்பெறவுள்ளன.

அத்துடன் வீட்டுத் தோட்ட பயிர்ச்செய்கைகளுக்காகவும் மரக்கன்றுகள் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் ஏற்றுமதி விவசாயத்துறையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்