அழகுகலை நிலையத்தில் இரண்டு மணப்பெண்கள் உட்பட அறுவர் மயங்கிய நிலையில் மீட்பு

அழகுகலை நிலையத்தில் இரண்டு மணப்பெண்கள் உட்பட அறுவர் மயங்கிய நிலையில் மீட்பு

மீரிகம பகுதியில் உள்ள அழகு நிலையமொன்றில் இரண்டு மணப்பெண்கள் உட்பட அறுவர் மயங்கிகிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மயங்கி கிடந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், எனினும் அவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

அழகு நிலையத்தின் உரிமையாளர், மூன்று ஊழியர்கள் மற்றும் இரண்டு மணப்பெண்கள் மயக்கம் அடைந்து பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

ஊடக அறிக்கையின்படி, குளிரூட்டி (எயாகொண்டிஷன்) மூலம் வெளியேறிய நச்சு வாயுவை இவர்கள் சுவாசித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

எயா கொண்டிஷனருக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த மின் பிறப்பாக்கி கட்டடத்திற்குள் நச்சு வாயு பரவுவதற்கு காரணமாக இருக்கலாம், இதன் விளைவாக இவரர்கள் மயக்கமடைந்துள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.