உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பதில் பொலிஸ்மா அதிபரின் அறிக்கைகளை திருப்பி அனுப்பினார் சட்டமா அதிபர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பதில் பொலிஸ்மா அதிபரின் அறிக்கைகளை திருப்பி அனுப்பினார் சட்டமா அதிபர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த 40 முழுமையற்ற விசாரணை அறிக்கைகள், பதில் பொலிஸ்மா அதிபருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதாவது இதற்கு முன்னர் பதில் பொலிஸ்மா அதிபரினால் முன்வைக்கப்பட்ட 40 முழுமையற்ற விசாரணை அறிக்கைகளே சட்டமா அதிபரினால் மீண்டும் அவரிடமே இன்று (வெள்ளிக்கிழமை) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த விசாரணைகளை முழுமையாக நிறைவு செய்து சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.