நேற்று அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் கம்பஹாவில் பதிவு...!

நேற்று அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் கம்பஹாவில் பதிவு...!

இலங்கையில் நேற்று இனங்காணப்பட்ட 695 கொரோனா தொற்றாளர்களில் அதிகமானோர் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக கொவிட் 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கம்பஹா மாவட்டத்தில் இருந்து நேற்று 168 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் கம்பஹா மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் பதிவான கொரோனா தொற்றாளர்கள் 41 பேர் நீர்கொழும்பு பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் நேற்று 147 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

கொழும்பில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள்  மருதானையில் இனங்காணப்பட்டதுடன், அவ்வாறு இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 21 ஆகும்.