வவுனியாவில் நீண்ட காலமாக மூடப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் டக்ளஸ் ஊடாக மேற்கொண்டுள்ள நடவடிக்கை!

வவுனியாவில் நீண்ட காலமாக மூடப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் டக்ளஸ் ஊடாக மேற்கொண்டுள்ள நடவடிக்கை!

வவுனியாவில் நீண்ட காலமாக திறக்கப்படாமல் காணப்படும் பொருளாதார மத்திய நிலையம் இரு வாரங்களில் மீண்டும் திறக்கப்படும் என அமைச்சர் சசீந்திர ராஜபக்ச உறுதியளித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது,

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவினுடாக அமைச்சர் சசீந்திர ராஜபக்சவுடன் இன்று வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தினை செயற்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாகிய போதிலும் திறக்கப்படாமல் காணப்படுவதனால் குறித்த கட்டிடம் வீணாகுவது மற்றும் பொருளாதார மத்திய நிலையத்தின் தேவை குறித்து தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இரு வாரங்களில் வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தினை திறப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என என்னிடம் உறுதி அளித்தார் எனவும் அவர் தெரிவித்தார்.