கோர விபத்து - பலியான இளைஞர்கள்..!

கோர விபத்து - பலியான இளைஞர்கள்..!

எட்டியாந்தோட்டை - புலத்கொஹுபிட்டி பிரதான வீதியின் கௌனிவத்தை கோவிலுக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டியொன்றும் மகிழூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டமையினால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

23 மற்றும் 24 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய மகிழூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.