கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞான ஆய்வு பிரிவு தெரிவிப்பு...!

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞான ஆய்வு பிரிவு தெரிவிப்பு...!

மருத்துவமனைகளுக்கு வருகை தரும் நோயாளர்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞான ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் இதுவரை நாட்டில் சமூகத்திற்குற்படுத்தப்படவில்லை என தொற்றுநோய் விஞ்ஞான ஆய்வு பிரிவின் பணிப்பாளர் சுதத் சமரவீர தெரிவித்திருந்தார்.

அத்துடன் நேற்று முன்தினம் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில், கொவிட்-19 தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில்இ நாடாளுமன்றத்தின் பணிக்குழாமினர் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட 448 பேரின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்றைய தினம் கிடைக்கப்பெறவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் சுகாதார பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்கவிட்டால் மீண்டும் அந்த பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.