குசல் மெண்டிஸ் ஓய்வெடுக்க வேண்டும் - பிரண்டன் குறுப்பு...!

குசல் மெண்டிஸ் ஓய்வெடுக்க வேண்டும் - பிரண்டன் குறுப்பு...!

கொரோனா தாக்கத்திற்கு பின் இலங்கையில் நடைபெறுகின்ற முதல் சர்வதேச விளையாட்டுப் போட்டியாக இலங்கை- இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் நேற்று காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

தொடர்ந்து 4 ஆவது முறையாகவும் மதிப்பெண் வழங்குவோருக்கு தொந்தரவு செய்யாத குசல் மெண்டிஸ், தனது இன்னிங்ஸை வழக்கம் போல் பூஜ்ஜியத்துடன் முடித்தார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரினை ஒரு சுற்றுப்பயணத்திற்கு மாத்திரம் பயன்படுத்திக் கொண்ட அவர், சந்தூஷ் குணதிலக போன்ற இளம் வீரர்களுக்கு வழங்கப்படக்கூடிய வாய்ப்புகள் கூட அவருக்கு இலகுவாக கிடைப்பதனால் அந்த வாய்ப்புகளை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்.

இது தொடர்பாக இலங்கை அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் பிரண்டன் குறுப்பு கருத்து தெரிவிக்கையில், குசல் மெண்டிஸ் போன்ற இளம் வீரர்கள் இவ்வாறு தொடர்ந்து தோல்வியடைந்தால் அது அவரின் எதிர்காலத்தையே பாதித்து விடும். அதனால் அவரின் மனநிலையை சீராக அமைத்துக்கொள்ள அவருக்கு சிறிது காலம் ஓய்வு வழங்கி மீண்டும் அணியில் சேர்த்துக்கொள்ள நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.