மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான PCR பெறுபேறுகள் வெளியாகின..!
அமைச்சர் வாசதேவ நாணயக்கார இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவுஃப் ஹக்கீம் ஆகியோருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்களுடன் தொடர்பிலிருந்ததாக தெரிவிக்கப்படும் சிலருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ சீ ஆர் பரிசோதனைகளுக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய கடந்த புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட 15 நடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பீ சீ ஆர் பரிசோதனைகளுக்குரிய பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
குறித்த 15 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.