ஆபத்தான வலயங்களிலிருந்து வடக்கிற்கு வருவோர் குறித்து தகவல் தாருங்கள்! மக்களுக்கு முக்கிய அறிவித்தல்
வடக்கிற்கான புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா ஆபத்து நிறைந்த பிரதேசங்களிலிருந்து வட மாகாணத்திற்கு வரும் பயணிகள் அந்தந்த பிரதேசங்களில் சுகாதார பிரிவினருடன் தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
புகையிரதம் மூலம் வடக்கிற்கு வருகின்ற பயணிகள் தங்கள் தங்கள் இடங்களுக்கு வந்த பின்னர் உடனடியாக அந்தந்த பிரதேசத்தில் உள்ள சுகாதார பிரிவினருக்கு அறிவிக்க வேண்டும்.
அல்லது இவ்வாறு வருகின்றவர்களின் தகவல்களை பொது மக்கள் சுகாதார பிரிவுக்கு அறிவிக்க வேண்டும்.
முக்கியமாக கொரோனா ஆபத்து வலயங்களிலிருந்து வருகின்றவர்களை சமூக அக்கறையோடு செயற்படுமாறும் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.