COVID-19 தொற்று சமூக பரவல் நிலையை அடையவில்லை: சுகாதார அமைச்சு

COVID-19 தொற்று சமூக பரவல் நிலையை அடையவில்லை: சுகாதார அமைச்சு

COVID-19 தொற்று சமூக பரவல் நிலையை அடையவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனைகளில் 3.5-இற்கும் 4 வீதத்திற்கும் இடைப்பட்டோருக்கே தொற்று உறுதிப்படுத்தப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்த்ன தெரிவித்துள்ளார்.

இந்த வீதமானது 5 வீதத்தைக் கடந்தால் மாத்திரமே சமூகத் தொற்றாக அடையாளம் காணப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தி, தொற்று மேலும் பரவாதிருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு வழங்கிய ஒத்துழைப்பை, மக்கள் தொடர்ந்தும் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்