கொழும்பில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகாிப்பு!

கொழும்பில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகாிப்பு!

நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 692 பேரில் அதிகமனோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட்-19 தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 223 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 119 பேருக்கும் களுத்துறை மாவட்டத்தில் 112 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் 233 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கிடையில் நேற்று தொற்றுறுதியானவர்களின் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 5 பேரும் அடங்குவதான கொவிட்-19 தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில்; தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை வரையி;ல் மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன்சந்தை கொத்தணிகளுடன் தொடர்புடைய 46 ஆயிரத்து 435 பேருக்கு இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவர்களில் 40 ஆயிரத்து 509 பேர் குணமடைந்து சிகிச்சை நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதேவேளை இலங்கையில் இதுவரையில் தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 229 உயர்வடைந்துள்ளது.

6 ஆயிரத்து 715 கொவிட் 19 நோயாளர்கள் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 646 பேர் நேற்றைய தினம் குணமடைந்தமையை அடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 43 ஆயிரத்தை கடந்துள்ளது.

தொற்று நோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து 43 ஆயிரத்து 267 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

மேலும் முப்படையினரால் முன்னெடுத்து செல்லப்படும் 81 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 6 ஆயிரத்து 703 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் நாட்டில் நேற்றைய தினம் 14 ஆயிரத்து 329 பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கொவிட்-19 தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில்; தெரிவிக்கப்பட்டுள்ளது.