சட்டத்தரணிகள் தொடர்பான தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை...!

சட்டத்தரணிகள் தொடர்பான தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை...!

சட்டத்தரணிகள் 150 பேர் பிரதான காவல்துறை பரிசோதகர்களாக காவல்துறை திணைக்களத்துடன் இணைந்து சேவையாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் மீண்டும் ஆராயுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நீதியமைச்சரிடம் கோரியுள்ளது.

நீதி அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சட்டத்தரணிகள் சங்கம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

வழக்குகளை விரைவுப்படுத்த வேண்டிய தேவை காணப்படின் மாவட்டங்களுக்கு உள்ளேயே அரச வழக்கு பிரிவு ஒன்றைய உருவாக்குமாறும் அவர்கள் தமது கடிதத்தில் கோரியுள்ளனர்.

இதனூடாக சட்டத்தரணிகளின் ஒழுக்கவிதிகளில் பாதிப்பு ஏற்படக்கூடுமெனவும் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.