வரும் நாட்களில் சுகாதார ஆலோசனைகளுக்கமைய சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள் - பாதுகாப்புச் செயலாளர்

வரும் நாட்களில் சுகாதார ஆலோசனைகளுக்கமைய சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள் - பாதுகாப்புச் செயலாளர்

யுக்ரைன் நாட்டவர்களை அழைத்து வருவதில் ஏற்பட்ட குறைபாடுகளை இனங்கண்டு சுகாதார ஆலோசனைகளுக்கமைய சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு வரும்நாட்களில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தொிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தொிவித்தார்.