நன்றியுணர்வுக்கு மகுடம் சூட்டும் தைத்திருநாள் பண்டிகை இன்று

நன்றியுணர்வுக்கு மகுடம் சூட்டும் தைத்திருநாள் பண்டிகை இன்று

மனித குலத்தின் மாண்பை நிலைநாட்டும் நன்றியுணர்வுக்கு மகுடம் சூட்டும் திருநாளாக தமிழர்களின் தைத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

தமக்கு உதவியளிப்போருக்கு நன்றி மற்றும் விசுவாசத்தை வெளிப்படுத்துவது மனிதனிடம் மாத்திரமன்றி விலங்குகளிடம் உள்ள உயரியப் பண்பாகும்.

எனினும், மனித குலத்தில் இருந்து மறைந்துக்கொண்டிருக்கும் நன்றியுணர்வு என்ற மாண்புமிக்க அம்சத்தை வருடத்தில் ஒருமுறை பரீட்சித்து பார்க்கும் நாளாக தைப்பொங்கல் அல்லது சூரியப்பொங்கல் அமைகிறது.

உழவர்கள், வருடத்தின் முதலாவது அறுவடை மூலம் கிடைக்கப்பெற்ற அரிசியை பொங்கி, சூரிய பகவானுக்கு படைப்பதே இன்றைய நிகழ்வின் முக்கிய அம்சமாகும்.

இதன்மூலம் இறையாற்றலின் வழியில் இந்த உலகத்துக்கு எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி தமது சேவையை வழங்கிக்கொண்டிருக்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது

காலையில் சூரியன் உதிக்கும் வேளையில் சூரியனுக்காக பொங்கல் பொங்கி அந்த சூரியனை மகிழ்விக்கும் நிகழ்வு உலகின் அனைத்துப்பகுதிகளிலும் இன்று கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது.