இலட்சத்தை நோக்கி நகரும் தொற்றாளர்களின் எண்ணிக்கை..!

இலட்சத்தை நோக்கி நகரும் தொற்றாளர்களின் எண்ணிக்கை..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 378 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50224 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனா தொறற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 43,267 பேர் குணமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 6,713பேர் தற்சமயம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக இராணுவ தளபதி தெரிவித்தள்ளார்.