மக்கள் அதிகளவில் ஒன்று கூடும் இடங்கள் தொடர்பில் இராணுவ தளபதி வெளியிட்டுள்ள தகவல்
நாட்டில் மக்கள் அதிகமாக ஒன்றுகூடும் இடங்களில் கொரோனா தொற்றுக்கான துரித பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பில் அரசாங்கம் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது பேசிய அவர்,
இதன்படி பல்பொருள் அங்காடிகள், மீன் சந்தைகள் உள்ளிட்ட அதிகளவானோர் செல்லக்கூடிய இடங்களில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதற்கு மேலதிகமாக கொழும்பு மாவட்டத்திலிருந்து வெளியேறும் தரப்பினருக்காக 11 இடங்களில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளும் திட்டம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.
அடுத்த மாதத்தில் ஏதேனும் ஒருவகை கொரோனா தடுப்பூசி நாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரோனா தடுப்பூசியை ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் இராணுவத்தினரின் தலைமையில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.