தோட்டத்தொழிலாளர்களின் வேதன பிரச்சினையை தீர்ப்பதற்கான பொறுப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் கையளிப்பு...!

தோட்டத்தொழிலாளர்களின் வேதன பிரச்சினையை தீர்ப்பதற்கான பொறுப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் கையளிப்பு...!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன பிரச்சினையை தீர்ப்பதற்கான பொறுப்பையும், அதிகாரத்தையும் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் அமைச்சரவை கையளித்துள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இணையவழி ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பேச்சுவார்த்தையின் தன்மை என்ன? அதனை தொடர்ந்தும் முன்கொண்டுசெல்ல முடியுமா? அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பதை பேச்சுவார்த்தையின் இறுதியில்தான் அமைச்சரவை பத்திரம் மூலம் அவர் அமைச்சரவைக்கு அறிவிப்பார்.

எனவே, பேச்சுவார்த்தை இடம்பெற்றுக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அது தொடர்பான மேலதிக தகவல்களை அவரினால் மாத்திரமே வழங்க முடியும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஏனெனில், அரசாங்கம் சார்பில் தொழில் அமைச்சரான நிமல் சிறிபாலடி சில்வா அந்தப் பேச்சுவாத்தைக்கு தலைமைதாங்குவதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.