பொலித்தீன் தடைக்கு மாற்று வழிமுறைகளை அறியும் திட்டம்...!
எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் தடையின் காரணமாக மாற்று வழிமுறைகளை அறிந்து கொள்வதற்கு நனோ தொழில்நுட்பத்தின் ஒத்துழைப்பு பெறப்படவுள்ளது.
குறுகிய காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் தடையை அடுத்து, அதற்கு பதிலாக கண்டறியக்கூடிய சுற்றாடலுக்கு பொருத்தமான மாற்று தயாரிப்புக்கள் தொடர்பில் நனோ தொழில்நுட்பம் உதவ வேண்டும் என்று சுற்றாடல் துறை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நனோ தொழில்நுட்ப அதிகாரிகளுடன் இது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் தற்பொழுது ஏற்றுமதி செய்யப்படும் எரிபொருள் வகைகளில் பெரும்பாலானவை மூலப்பொருளாகவே எற்றுமதி செய்யப்படுகின்றன.
இருப்பினும், பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்தி என்ற ரீதியிலோ அல்லது முழுமையாக தயாரிக்கப்பட்ட பொருட்களாகவோ ஏற்றுமதி செய்யப்படுமாயின், தற்பொழுதிலும் பார்க்க பெருந்தொகை வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.