திருகோணமலையில் சில பிரதேசங்களில் இன்று மாலையில் நீர்வெட்டு...!
திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று மாலை 5 மணி முதல் நாளை மதியம் 12 மணிவரை 19 மணிநேர நீர்விநியோகத்தடை அமுலாக்கப்படவுள்ளது.
நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபை இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
திருகோணமலை நீர்வழங்கல் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் அவசர சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய, தம்பலகாமம், கிண்ணியா, குச்சவெளி, திருகோணமலை நகரமும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள குறுக்கு வீதிகளின் பகுதிகளிலும் நீர்விநியோகம் தடைப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.